தமிழ்

செபித்தல்

என்னுடன் பேசுவதன் வழியாக நான் உனக்கு உதவ முடியும்,
  உன் வாழ்நாளில் நீ எதிர்கொள்பவற்றைப் புரிந்துகொள்ள.
என்னுடன் செலவிடும் அந்த நேரம் அமைதியானதாக இருக்க வேண்டும்.

நாம் ஒருவரையொருவர் நெருக்கமாக அறிந்துகொள்ள வேண்டும்.
என்னுடன் பேசுவதன் மூலமும், நீ செவிகொடுத்து, பார்த்து,
  உன்னைச் சுற்றி நான் ஆற்றும் செயல்களை உணர்ந்துகொள்வதன் மூலமும் இதைச் செய்.

இதன் வழியாகவே நான் உனக்குக் காட்டுகிறேன்:
  நீ மகிழ்ச்சியோடும் ஆனந்த நிறைவோடும் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
உன் செபம் மனந்திறந்ததாகவும் அமைதி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
என்னை ஆழமாக அறிந்துகொள்ள என்னுடன் நேரம் செலவிடு.

நான் உனக்குப் பல அடையாளங்களையும் ஆசிகளையும் அளிப்பேன்,
  உன் செபங்களில் நீ இன்னும் அதிக நம்பிக்கை கொள்ள உதவுவதற்காக.

உன் சுமைகளை என்னிடம் ஒப்படைக்க அஞ்சாதே,
  ஏனெனில் என் பார்வையில் அவை சிறியவையே.

நீ இன்னும் அதிகமாகக் கேட்பதற்கு நான் மேலும் மேலும் உனக்கு உதவுவேன்.
நீ என்னை அன்பு செய்வதாக என்னிடம் சொல்; என்மீதுள்ள இந்த அன்பை வாழ்வில் வெளிப்படுத்து.
உன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் இதைச் செய்யலாம்.

சுயநலத்துடனோ பொறுமையின்றியோ இருக்காதே,
  என்னுடன் நீ செலவிடும் நேரத்தில்,
  ஏனெனில் இது என் அமைதிக்கு உன்னை இட்டுச் செல்லாது.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: