தமிழ்

புனிதத்திற்கான பாதை

 

புனிதத்திற்கான பாதை:
அன்பின் உயிருள்ள பலியாக மாறுதல்

நீங்கள் புனிதராக மாற அழைக்கப்பட்டுள்ளீர்கள்.  ஆனால், “புனிதம்” என்றால் என்ன? அதை எவ்வாறு அடைவது? புனிதத்திற்கான பாதை தாழ்ச்சி, நம்பிக்கை ஆகிய நற்பண்புகளை மையமாகக் கொண்டுள்ளது. அந்த நற்பண்புகளை ஏற்றுக்கொள்வதன் வழியாக, கிறிஸ்துவின் அதே தியாக அன்பை நீங்கள் வாழத் தொடங்கும் வகையில் கடவுள் உங்கள் வாழ்வை மாற்றியமைப்பதைக் காணத் தொடங்குவீர்கள்.  மேலும், தியாக அன்புடன் வாழ்வதற்கு, நீங்கள் இவ்வுலகில் இரக்கத்தின் ஒளிவிளக்காக மாற வேண்டும். வருந்தத்தக்க வகையில், பல விதங்களில் இரக்கமற்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். கடுமையாக நடந்துகொள்வதும் பிறரைத் தீர்ப்பிடுவதும் இயல்பாகிவிட்ட உலகம் இது. எனினும், இன்றைய காலத்தில் பலரிடம் இரக்கம் இல்லாததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்களிடம் தாழ்ச்சியும் நம்பிக்கையும் இல்லாததே. துன்பம் நிறைந்த ஓர் உலகிலும் நாம் வாழ்கிறோம். ஆனால், வருந்தத்தக்க வகையில், புனிதத்தின் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கான வாய்ப்பாகத் துன்பம் அரிதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. துன்பம் அரிதாகவே தியாக வாழ்வாக மாற்றப்படுகிறது. மாறாக, அது பெரும்பாலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு சுமையாக மட்டுமே அனுபவிக்கப்படுகிறது.

புனிதத்திற்கான பாதையை இன்னும் ஆழமாக நோக்கவும், உங்கள் சொந்த வாழ்வில் அப்பாதையில் எவ்வாறு பயணிக்கலாம் என்பதைக் கண்டறியவும் உங்களுக்கு அழைப்பு விடுப்பதே இந்நூலின் நோக்கம். புனிதம் பற்றிய இறையியலை நீங்கள் புரிந்துகொள்வதற்கு உதவுவதற்காக மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை; மாறாக, புனிதத்தை வாழ்வில் கடைப்பிடிப்பதற்கான அழைப்பு இது.  இணையத்தில் இலவசமாக வாசியுங்கள், அல்லது வாங்குங்கள்: மின்னூல் அல்லது மென் அட்டைப் புத்தக வடிவில்.


பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயம் 1 – புனிதத்தின் அவசியத்தை எடுத்துரைத்தல்

அத்தியாயம் 2 – தாழ்ச்சி என்னும் நற்பண்பு

அத்தியாயம் 3 – நம்பிக்கை என்னும் நற்பண்பு

அத்தியாயம் 4 – இரக்கம் என்னும் நற்பண்பு

அத்தியாயம் 5 – அன்பின் உயிருள்ள பலி


மின்னூல் அல்லது மென் அட்டைப் புத்தக வடிவில் கிடைக்கிறது:

Amazon – Google Play – iTunes – Barnes and Noble

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: