தமிழ்

இக்கட்டான தேர்வுகள்

நீ விடைகளைத் தேடுகிறாய்; கேள்விகளைக் காண்கிறாய்.
விடைகளே இல்லாத கேள்விகளைக் காண்கிறாய்.
எத்தகைய விடைகள் உனக்கு மனநிறைவு தரும்?

இந்தச் சிக்கல்களால் உன் நம்பிக்கை சோதிக்கப்படுகிறது.
உண்மையைத் தேடும் உன் தேடல் விரிவடைகிறது
  இந்த அனுபவங்களின் வழியாக.
இந்தச் சிக்கல்களை நீ எவ்வாறு எதிர்கொள்கிறாய்?

அமைதிக்கான உன் தேடல் உன்னை வழிநடத்தட்டும்,
  என்னில் ஆறுதல் காண்பதற்கு.
நானே உன் விடை.
என்னிடம் கேள்வி கேள்;
  உனக்கான விடைகளைப் பெற என்னை நோக்கு.

நீ தீர்வுகளை அறிந்திருக்க வேண்டியதில்லை,
  உன் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும்;
  ஏனெனில், அவ்வாறு அறிவது உன்னை எனது இயல்புக்குள் கொண்டுவந்துவிடும்.

உன் மனித வரம்புகளை உணர்ந்துகொள்; நம்பிக்கை கொள்,
  உன் அறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்திலும் எனக்குப் பங்கு உண்டு என்று.
நீ எனக்குப் பணிந்திருக்கும்போது உன் நம்பிக்கை வலுப்பெறுகிறது.

நீ தேடுவதை என்னில் கண்டுகொள்;
  இருப்பதெல்லாம் நானே.
நீ தேடும் அமைதியை என்னில் கண்டுகொள்,
  ஏனெனில், தேவையானதை நான் உனக்குத் தருவேன்.
நீ யார் என்பதை என்னில் கண்டுகொள்,
  ஏனெனில், நீ தேடியது நானே.

உன்னால் புரிந்துகொள்ள இயலாதது நானே.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: