ஒவ்வொரு நாளும் என் பிரசன்னத்தைப் பற்றிய செய்தியைக் கொண்டுவருகிறது.
என் பிரசன்னத்தை வெளிப்படுத்தும் இந்த அறிகுறிகளைத் தேடு.
உன் அன்றாட வாழ்வில் என் பிரசன்னத்தை உணர்ந்துகொள்.
நீ கண்டுகொள்ளும்படி நான் அங்கே இருக்கிறேன்.
இந்த நிகழ்வுகள் உனக்கு நம்பிக்கையைத் தரும்.
அவற்றைத் தேடு, கண்டுகொள், அவற்றில் மகிழ்ந்திரு.
இந்த நிகழ்வுகள், அனைத்திலும் என் பிரசன்னம் இருப்பதை
உனக்கு உறுதிப்படுத்தும் என் வழிகளாகும்.
நீ உன் நம்பிக்கையை இழந்துவிட்டபோது,
ஒவ்வொரு நாளும் என் பிரசன்னத்தைத் தேடு;
நீ கண்டுகொள்வதை நம்பு.
உனக்குச் சந்தேகங்கள் எழும்போது,
என் செயல்களில் நம்பிக்கை வை;
நான் உன்னுடன் இருக்கிறேன் என்று நம்பு.
நீ விரக்தியில் திசைதெரியாமல் தவிக்கும்போது,
என் பிரசன்னத்திலிருந்து எதிர்நோக்கைப் பெற்றுக்கொள்;
ஏனெனில் அது என் நற்குணத்தை உனக்கு உறுதிப்படுத்தும்.
இவற்றைச் செய்; அப்போது உன் பார்வைகள் என் பார்வைகளைப் போலாகும்.
உன் எதிர்நோக்கு என் நற்குணத்தின்மீது நிலைகொள்ளும்;
உன் நம்பிக்கை எந்தத் தாக்குதலையும் தாங்கி நிற்கும்.
