எல்லாவற்றிலும் முக்கியமானது
உன்மீது நான் கொண்டுள்ள அன்பே.
அது மழையைப் போன்றது
ஏனெனில், தான் பொழியும் அனைத்தையும்
அது தூய்மையாக்குகிறது.
அது கதிரவனைப் போன்றது
ஏனெனில், உயிருள்ள அனைத்திற்கும்
அது புத்துணர்ச்சி அளிக்கிறது.
அது காற்றைப் போன்றது
ஏனெனில், தன் ஊட்டம் தேவைப்படும் அனைத்திற்கும்
அது உயிரளிக்கிறது.
அன்பின் இயல்பு இதுவென்றால்,
அதன் நற்பயன்களைப் பெற்றுக்கொள்.
அன்பின் ஆசிகளை ஏற்றுக்கொள்
அதன் கனிகளைப் பகிர்ந்துகொள்
உன் பாதையில் எதிர்ப்படுவோருடன்.
