தமிழ்

ஆன்மிகக் கொடைகளும் பகிர்ந்தளித்தலும்

உனக்குக் கிடைத்துள்ள இந்த நேரம் நான் தந்த கொடை.
அதை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்து,
  ஏனெனில் நான் தீர்மானிக்கும் வேளையில் அது முடிவுக்கு வரும்.
பிறரின் தேவைகளை நிறைவேற்ற இந்தக் கொடையைப் பயன்படுத்து.
அவர்கள் தங்கள் கொடைகளை மகிழ்ந்து அனுபவிக்க உதவு,
  நான் உனக்கு உதவுவதுபோல.

உனக்கான கொடைகளை நீ என்னிடமிருந்து நாடுவாயாக.
நீ நிறைவான மகிழ்ச்சியைக் கொண்டுவருவாயாக,
  உன்னைச் சுற்றியுள்ளோருக்கு.
இதைவிட மேலான கொடுத்தல் வேறென்ன இருக்க முடியும்?

நீ சந்திப்போருக்கு அமைதியைக் கொண்டுசெல்.
அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடு.
வேதனையில் வாடுவோருக்கு வாழ்வைக் கொண்டுசெல்.
இந்தத் துன்பக் காலத்தைக் கடந்துசெல்ல அவர்களுக்கு உதவு.

தங்கள் சூழ்நிலைகளைக் குறித்து சினமடைந்திருப்போரிடம் மென்மையாக நடந்துகொள்.
அவர்கள் உன் பாதையில் எதிர்ப்படும்போது அவர்களுக்கு ஞானத்தைக் கொண்டுசெல்.
உன் கண்களில் பரிவு வெளிப்படட்டும்,
  அது அவர்களின் வேதனையைச் சென்றடையட்டும்.
உன் வலிமை அவர்களின் வேதனையைக் குணமாக்கும்.

அவர்கள் குணமடையும்பொருட்டு நான் அவர்களை உன்னிடம் அழைத்து வருகிறேன்.
என் வலிமை அவர்களுக்குள் பாய்ந்துசெல்ல இடம்கொடு.
இந்த மக்களுக்கு என் வலிமை தேவை.
இந்த நோக்கத்திற்காக நான் உன்னைப் பயன்படுத்த இடம்கொடு.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: