திருநீற்றுப் புதனும் பெரிய வெள்ளியும் கத்தோலிக்கர்களுக்கு ஒருசந்தி நோன்பும் புலால் மறுப்பும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நாள்களாகும். மேலும், தவக்கால வெள்ளிக்கிழமைகளில் புலால் மறுப்பைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.
இலத்தீன் கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை ஒருசந்தி நோன்பு குறித்த விதிமுறைகள் கட்டாயமாகும். ஒருசந்தி நோன்பைக் கடைப்பிடிக்கும்போது, ஒருவர் ஒரு வேளை முழு உணவும், அத்துடன் குறைந்த அளவில் இரு வேளை உணவும் உண்ண அனுமதிக்கப்படுகிறது. இந்த இரு வேளை உணவையும் சேர்த்தாலும் அவை ஒரு முழு வேளை உணவுக்கு ஈடாக இருக்கக்கூடாது. புலால் மறுப்பு குறித்த விதிமுறைகள் இலத்தீன் கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்களுக்கு 14 வயது முதல் கட்டாயமாகும்
கிழக்கத்திய கத்தோலிக்கத் திருஅவைகளின் உறுப்பினர்கள், தங்களது சொந்த தன்னாட்சியுரிமை பெற்ற திருஅவையின் தனிச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆண்டவர் இயேசுவின் துன்பங்களையும் இறப்பையும் போற்றவும், அவரது உயிர்ப்பில் இன்னும் முழுமையாகப் பங்குபெறவும், அதை இன்னும் ஆயத்தமான மனத்துடன் கொண்டாடவும் நம்மைத் தயாரிக்க, முடிந்தால் பெரிய வெள்ளியன்று கடைப்பிடிக்கும் ஒருசந்தி நோன்பு, பாஸ்கா திருவிழிப்பு வரை (புனித சனிக்கிழமை இரவு) “பாஸ்கா நோன்பாக” தொடரப்படுகிறது.
ஆதாரம்: usccb.org