தமிழ்

குடும்பங்களுக்கான செபம்

கடவுளே, அன்பும் இரக்கமும் நிறைந்த எங்கள் தந்தையே, எல்லாக் குடும்பங்களையும் ஒன்றுசேர்த்து, அன்பிலும் பரஸ்பர ஆதரவிலும் நிறைவான ஒன்றிப்புடன் நிலைத்திருக்கச் செய்தருளும்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் மனப்பான்மையையும் பரிவையும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரிலும் வளர்த்தருளும்.

சண்டைகளும் மனக்கசப்பும் அவர்களை அணுகாதவாறு காத்தருளும்; அவ்வப்போது அவர்கள் தவறும்போது, மன்னிப்பையும் அமைதியையும் அவர்களுள் வளர்த்தருளும்.

பெற்றோர் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் பரிவும் நல்ல முன்மாதிரியாக விளங்கட்டும்.

பிள்ளைகள் பிறரை மதிக்கவும், முதிர்ச்சியுள்ள சுயசார்புடன் வளரவும் அவர்களுள் தன்மதிப்பை வளர்த்தருளும்.

குடும்பங்களில் ஒருவருக்கொருவர் காட்டும் பரிவும் மதிப்பும் இம்மையிலும் மறுமையிலும் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளமாக விளங்கட்டும். எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து வழியாக இதை மன்றாடுகிறோம்.

ஆமென்.


மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: