தமிழ்

உயர்த்தப்படுதல்

என்ன ஒளியை நீ காண்கிறாய்
  உனக்குத் தெரியாத விடைகளைத் தேடும்போது?
நீ பெறும் விடைகள் போதாமல் போகின்றனவா
  நீ விரும்பும் தெளிவைப் பெறுவதற்கு?
நீ குழம்பிப் போகிறாயா
  உன் ஆழ்ந்த சிந்தனைகளாலும் அமைதியின்மையாலும்?

முதலில் உன் இயலாமையை உணர்ந்துகொள்
  வாழ்வின் கேள்விகளுக்கு விடைகாண்பதில்.
சிறிதளவே என்பதைப் புரிந்துகொள்
  உன்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது.

நீ கனமான சுமையைச் சுமந்துகொண்டிருந்தால்,
  அதை இறக்கிவிடு.
நீ உயர்த்தப்படுவாயாக,
  என் ஒளியை உணர்ந்துகொள்ளும்போது.
அதன் இதத்தையும் பரிவையும் அனுபவி.
அது ஏற்படுத்தும் தாக்கத்தால் ஊக்கம் பெறு.
என் ஒளி உன்னை நிரப்ப அனுமதி
  உனக்குத் தெரியாதவற்றால்.

இதற்கு இடமளி.
இதைக் கேள்.
இதை எதிர்பார்.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: