தமிழ்

அமைதி

நீங்கள் அன்பு செய்பவர்களோடு ஒன்றாக இருக்கும்போது,
  நான் மகிழ்கிறேன்.
என்னைப் புகழவும் ஒருவரையொருவர் பாராட்டவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்,
  உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களோடு.
இந்த அமைதி, உங்கள் மனிதப் புரிதலுடனும் உறவுகளுடனும்
  அதன் நிலையை நீங்கள் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது
  நீங்கள் எண்ணுவதற்கும் அப்பாற்பட்டது.
என் அமைதி உங்கள் கண்ணோட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்
  புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது.

நான் உங்களுக்குத் தரும் அமைதி முழுமையானது, அரைகுறையானதல்ல.
நான் உங்களுக்குத் தரும் அமைதி ஒளியானது, இருளானதல்ல.
நான் உங்களுக்குத் தரும் அமைதி என்னுடையது, உங்களுடையதல்ல.

நான் உங்களுக்குத் தருவதைப் பெற்றுக்கொள்ளுங்கள்,
  இந்தக் கொடை உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கும் உரியதாக இருக்கட்டும்.
நீங்கள் ஏன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
என் அமைதியை உங்களுடன் எடுத்துச் சென்று, பிறருக்காகப் பயன்படுத்துங்கள்.

என் அமைதி உங்களை மாற்றி வலுப்படுத்தும்.
என் அமைதி உங்களை எனக்கு அருகில் கொண்டுவரும்.
இதைக் கேளுங்கள்.

அஞ்சாதீர்கள்,
  உங்களில் காணப்படும் மாற்றத்தைக் கண்டு.
அஞ்சாதீர்கள்,
  உங்களுடன் இருப்பவர்களோடு இந்த அமைதியைப் பகிர்ந்துகொள்ள.
இந்த நோக்கத்திற்காக உங்களைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

நான் உங்களுள் இருக்க இடமளியுங்கள்.
உங்கள் வார்த்தைகள் என் வார்த்தைகளாக இருக்கட்டும்.
என் வார்த்தைகள் உங்களிடமிருந்து அவற்றைக் கேட்க வேண்டியவர்களிடம் பாய்ந்துசெல்லும்.
நான் உங்களைப் பயன்படுத்த இடமளியுங்கள். நான் உங்களை ஆசீர்வதிக்க இடமளியுங்கள்.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: