தமிழ்

குழந்தைகளுக்கான திருவருகைக் கால செபம்

உங்கள் குழந்தைகளுடன் படுக்கைக்குச் செல்லுமுன் அல்லது ஞாயிறு திருப்பலிக்குச் செல்லுமுன் செபிக்க

என் ஆண்டவராகிய குழந்தை இயேசுவே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; இந்தத் திருவருகைக் காலத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எனக்காகச் செய்துள்ள அனைத்தையும் புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும். உமது அன்புத் தாய் உம்மைத் தம் இதயத்தில் தாங்கி, இந்த உலகிற்குக் கொண்டு வந்தார். நானும் அவ்வாறே செய்ய எனக்கு உதவியருளும்.

 என் அன்பு இயேசுவே, இந்தத் திருவருகைக் காலத்தில் உம்மை என் அரசராகவும் என் கடவுளாகவும் தேர்ந்தெடுக்கிறேன். உம்மருகில் என்னை ஈர்த்துக்கொள்ளும். நான் மாற்ற வேண்டுமென நீர் விரும்புபவற்றை மாற்றிக்கொள்ள, என் பாவங்களைக் கண்டுணர எனக்கு உதவியருளும். 

அன்னை மரியே, கடவுள் என்னிடம் விரும்பும் அனைத்தையும் நான் செய்யும்படி, இந்தத் திருவருகைக் காலத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளும். கடவுள் உம்மிடம் கேட்ட அனைத்திற்கும் நீர் “ஆம்” என்று சொன்னீர். நானும் அவ்வாறே செய்ய எனக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆண்டவராகிய இயேசுவே, வாரும்,

ஆண்டவராகிய இயேசுவே, வாரும்,

வாரும், ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!

இயேசுவே, நான் உம்மை அன்பு செய்கிறேன்.

ஆமென்.

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: