தமிழ்

நாளை அர்ப்பணித்தல்

தந்தையே, இந்தப் புதிய நாளை உமக்கு அர்ப்பணிக்கிறேன்;

என் பணிகளைச் செய்யும்போது.

நான் சந்திப்பவர்களை ஆசீர்வதிக்குமாறு உம்மை வேண்டுகிறேன்.

ஆண்டவரே, ஆண்கள் பெண்கள் அனைவருக்காகவும் நான் வேண்டுகிறேன்,

தங்கள் வாழ்வாதாரத்திற்காக உழைப்பவர்களுக்காக;

அவர்கள் செய்யும் வேலையில் அவர்களுக்கு மனநிறைவை அளித்தருளும்.

இறைவனின் ஆவியாரே,

வேலையின்றி இருப்பவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளித்தருளும்;

அவர்கள் உமது பிள்ளைகளும் என் சகோதர சகோதரிகளுமாவர்.

அவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்க உதவுமாறு உம்மை வேண்டுகிறேன்.

ஆமென்.

லொயோலா புனித இஞ்ஞாசியார் இயற்றியது


மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: