தமிழ்

மனச்சோர்வை எதிர்கொள்ள உதவி

கிறிஸ்து இயேசுவே,

எங்கும் இருள் சூழ்ந்திருக்கும்போது,
என் பலவீனத்தையும் கையறுநிலையையும் நான் உணரும்போது,
உமது உடனிருப்பை நான் உணரச் செய்யும்,
உமது அன்பையும் உமது வல்லமையையும் உணரச் செய்யும்.
முழுமையான நம்பிக்கை கொள்ள எனக்கு உதவும்—
என்னைக் காக்கும் உமது அன்பிலும்
எனக்கு வலிமையூட்டும் உமது வல்லமையிலும்,
எதுவும் என்னை அச்சுறுத்தவோ கவலைக்குள்ளாக்கவோ செய்யாதபடி,
ஏனெனில், உமக்கு நெருக்கமாக வாழ்வதால்,
உமது கரத்தைக் காண்பேன்,

அனைத்திலும் உமது நோக்கத்தையும் உமது திருவுளத்தையும் காண்பேன்.

ஆமென்.

 லொயோலா புனித இஞ்ஞாசியார் இயற்றியது
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: