
உமது வலப்புறத்தில் நான் தொங்கினேன்,
உமது ஒவ்வொரு சொல்லையும் பற்றிக்கொண்டு.
உமது நாவு தாடைகளோடு ஒட்டியிருந்தும்,
உமது குரலை நான் கேட்டேன்.
அவர்களுக்காக மன்னிப்பு வேண்டினீர்,
எந்தக் காரணத்தையும் விட்டுவைக்காமல்.
தாழ்மையும் சாந்தமும் நிறைந்த உமது இதயம்
வசைமொழிகளுக்குப் பதில் தரவில்லை.
அப்போது நான் எண்ணினேன்: “நானும்
மன்னிப்பு வேண்டினால் என்ன?”
ஆனால் என் குற்றங்கள் அனைத்தையும் நினைத்தபோது
பேச முடியாமல் மூச்சடைத்தது.
நான் செய்தவை அனைத்திற்கும் பிறகும்,
கைகளை விரித்து என்னை வரவேற்றீர்,
இரக்கத்தோடு கேட்டீர்:
“இன்னும் என்னைவிட்டு ஓடுகிறாயா?
“உன் வேதனையில் நானும் துன்புற்று,
உன் சிலுவையைத் தோளில் சுமந்து,
உன் அன்பைத் தேடியும் அது கிடைக்காதபோது,
உன்னை இழந்ததற்காகத் துயருற்றேன்.
“இப்போது பரிகாரம் செய்ய
நீ எனக்கு அளிக்கக்கூடியது
இன்றைய உன் பிரமாணிக்கமே,
நாம் நண்பர்களாய் இருப்போம்.”
“இயேசுவே, என்னை நினைவுகூரும்!”
ஆழத்திலிருந்து கதறுகிறேன்.
“இன்றே நீ என்னோடு இருப்பாய்,
இனி ஒருபோதும் இறவாமல்.”
-அருள்பணி திமோத்தி ஜே. டிரேப்பர்
புனித வாரம் மற்றும் உயிர்ப்புப் பெருவிழா செபங்கள்
