தமிழ்

பணத்தைப் பற்றி

உன் வருமானத்தைப் பயன்படுத்து
  நீ ஆதரிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க.

உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்று கவலைப்படாதே.
நான் தேவையானதை அளிப்பேன்!

பிறருக்கு உதவியாக இரு,
  ஆனால் உன்னை
  என் பணிக்கு உதவாத ஒரு நிலையில் நிறுத்திக்கொள்ளாதே.
ஏழைகள் எப்போதும் இருப்பார்கள்.

நான் செல்வத்தைக் கொண்டு புனிதத்தை அளவிடுவதில்லை.
நான் உனக்குக் கொடுப்பதை ஞானத்தோடு பயன்படுத்து;
  நான் உன்னை அன்பு செய்கிறேன், உன்னை நம்புகிறேன்.

சிலருக்கு மிகுதியாகக் கொடுக்கப்படுகிறது;
  சிலருக்குக் குறைவாகக் கொடுக்கப்படுகிறது;
  சிலருக்கு எதுவும் கொடுக்கப்படுவதில்லை.
இந்த முடிவுகளை நானே எடுக்கிறேன்.

சிலருக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறது;
  மற்றவர்களுக்கு அவ்வாறு தேவைப்படுவதில்லை.
சிலர் மிகுதியாக விரும்புகிறார்கள்;
  மற்றவர்கள் அவ்வாறு விரும்புவதில்லை.
சிலர் மிகுதியாகப் பெறத் தகுதியுடையவர்கள்;
  மற்றவர்கள் அவ்வாறு தகுதியுடையவர்கள் அல்ல.
அனைவருக்கும் அவரவர் நலனுக்கு மிகச் சிறந்ததையே நான் கொடுக்கிறேன்.

நான் உனக்குக் கொடுப்பதைப் பயன்படுத்து
  நீ உகந்ததெனக் கருதும் அளவுக்குத் தாராளமாக.
நீ உந்தப்படாதே
  உலகத்தின் ஆசைகளால்.
நான் உனக்குக் கொடுப்பதெல்லாம்,
  உனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கும், உதவி பெறுவதற்காக நான் உன்னிடம் அழைத்து வருபவர்களுக்கும் நீ உதவி செய்து ஆசீர்வாதமாக இருக்கவே என்பதை அறிந்து நம்பு.

பசியோடு இருப்பவர்களுக்கு உணவளி;
  ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவி செய்.
இவர்கள் உன் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள்.

நான் செல்வத்தைக் கொடுக்கிறேன்
  இவ்வாறு பிறருக்குப் பணிபுரியக்கூடியவர்களுக்கு.
சிலர் செல்வத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்,
  ஆனால் எனக்குப் பணிபுரிவதில்லை.
இத்தகைய செல்வம் நிலைக்காது.
நீ பிறருக்கு உதவும்போது நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: