
இரவுக்கு இரவு,
குளிரிலும் அச்சத்திலும்,
கரிநெருப்பின் அருகே நின்றேன் நான்,
அங்கே குளிர்காய்ந்தபடி,
சபித்துச் சத்தியம் செய்து,
என்னைப் பொய்யனாகக் காட்டினேன்.
“கலிலேயாவிலிருந்து வந்தவன்
நீதானே,
சாந்தமே உருவான அவருடைய நண்பன்?”
சேவல் கூவியது.
“நீ சொல்லும் அந்த மனிதரை
எனக்குத் தெரியாது.”
ஆனால் அப்போது அவர் திரும்பினார்,
அவரது பார்வை ஏற்றிய சுடர்
என்னுள் கொழுந்துவிட்டு எரிந்தது,
அதனால் நான் அழுதேன்,
காப்பாற்றாத வாக்குறுதிகளுக்காகவும்
பற்றின்றி வாழ்ந்த என் நாட்கள் அனைத்திற்காகவும்.
அவர் விசாரிக்கப்பட்டபோது
அவரை மறுதலித்தேன்,
சோதனையில் தோற்றுப்போனேன்,
மற்ற அனைவரும் அவரைக் கைவிட்டாலும்,
அவரோடு இறப்பதாக
நான் வாக்களித்திருந்தும்.
வருத்தங்கள் நிறைந்த உள்ளத்தோடும்
வெறுமையான வலைகளோடும்,
பழைய தொழிலுக்குத் திரும்பினேன்.
ஆனால் விடியல் வந்தபோது,
அவர் என் பெயரைச் சொல்லி அழைத்தார்,
கரிநெருப்பு எரிந்துகொண்டிருக்கையில்.
இப்போது கரையிலே,
மீண்டும் அவர் கேட்கிறார்,
நான் அவரது நண்பனாக இருப்பேனா என்று
மேலும், மணற்பரப்பிலே,
துளைக்கப்பட்ட கைகளால்,
மேய்ப்பதற்குத் தம் ஆடுகளை என்னிடம் தருகிறார்.
-அருள்பணி திமோத்தி ஜே. டிரேப்பர்
புனித வாரம் மற்றும் உயிர்ப்புப் பெருவிழா செபங்கள்
சிறப்புப் படம்: யான் வான் டெ வென்னெ, பொதுக் கள உரிமம், விக்கிமீடியா காமன்ஸ் வழியாக
