இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

உன்னதங்களில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுக!
என் அன்பிற்கினிய ஆண்டவராகிய இயேசுவே,
ஆழ்ந்த அன்போடு உம்மை ஆராதித்து, உமது பிறப்பைக் கொண்டாடுவதில் மகிழ்கிறேன்.
எங்கள்மீது நீர் கொண்டுள்ள அன்பு அளவிட முடியாதது,
அது மாட்சி நிறைந்தது
மாற்றம் விளைவிப்பது,
பேருவகையும் வியப்பும் எழுப்புவது,
ஆழ்ந்த தனிப்பட்ட அன்பாகவும் உள்ளது.
எங்களிடையே வந்து குடிகொள்ள நீர் திருவுளம் கொண்டீர்,
வறுமையிலும் புறக்கணிப்பிலும் தாழ்மையிலும் பிறந்தீர்.
ஆயினும், தாம் பெற்றெடுத்தவர் யார் என்பதை உமது அன்னை அறிந்திருந்தார்,
அவரது இதயம் மிகுந்த கனிவான அன்பால் நிறைந்திருந்தது
தம் குழந்தையும் கடவுளுமான உம்மை அவர் ஆராதித்தபோது.
அன்பு ஆண்டவரே, எனக்கு உதவியருளும்.
உமது அன்னையின் இதயத்தோடு உம்மை நேசித்திட.
புனித யோசேப்போடும் ஏழை இடையர்களோடும் இணைந்து உம்மை ஆராதிக்க என்னை அழைத்தருளும்.
உமது பிறப்பின் மாட்சிமைமிக்க வல்லமையை எனக்கு வெளிப்படுத்தியருளும்
உம்மையே நீர் அளித்த இந்த நிறைவான கொடையால் என் வாழ்வை மாற்றியருளும்.
அன்பு ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்.
என் முழு இதயத்தோடும் உம்மை நேசிக்க எனக்கு உதவியருளும்.
பிறந்துள்ள உலக மீட்பரே,
நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
அன்னை மரியாவே, புனித யோசேப்பே,
எனக்காகவும் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆமென்.
மேலும் கிறிஸ்துமஸ் சிந்தனைகள்:
நினைவுகூரப்படும் மகிழ்ச்சித் துள்ளல்
ஓர் அன்னையின் ஆழ்ந்த சிந்தனைகள்
இதையும் காண்க: இறை இரக்கம் குறித்த அன்றாடச் சிந்தனை