உன் சுமைகளோடு என்னிடம் வா.
அவற்றை என் பாதங்களில் வை.
அவற்றை என்னிடம் கொடுத்து, உன்னை மாற்ற எனக்கு இடம் கொடு.
நீ மிகவும் துன்பப்படுகிறாய்.
உனக்கு உதவ எனக்கு இடம் கொடு.
கலக்கத்தால் உன் மனம் குழம்பியிருக்கும்போது,
அதிலிருந்து உன்னை விடுவிக்க எனக்கு இடம் கொடு.
நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து உன்னைத் தூக்கி எழுப்புவேன்.
உன்னை விடுதலையாக்க எனக்கு இடம் கொடு.
இந்த வாக்குறுதியில் என்னை நம்பு; ஏனெனில், நீ அனுபவிக்கும் எந்த வேதனையையும்விட, நீ அமைதி பெற வேண்டும் என்ற என் விருப்பம் பெரிது.
