தமிழ்

நான் ஓய்வெடுப்பது சரிதானா?

நான் ஓய்வெடுப்பது சரிதானா?
முடிக்கவில்லை, ஆயினும் என்னால் இயன்றதைச் செய்தேன்.
முடிக்காத வேலை என்னை வெட்கத்தில் ஆழ்த்துகிறது,
பழி என்மேல் விழுமோ என அஞ்ச வைக்கிறது.

கண்களை மூடி என் அன்னையின்
தாலாட்டைக் கேட்க எவ்வளவாய் ஏங்குகிறேன்!
ஆனால் என் தவறால் ஏதேனும் பிழை நேர்ந்தால்,
அவரது பாடலுக்கு நான் தகுதியுள்ளவனா?

அவர் இரக்கமுள்ளவர் என்றும்,
என் ஆன்மாவைப் புரிந்துகொள்பவர் என்றும் நம்புகிறேன்.
இவ்வாறு அன்பில்தான் உண்மை காணப்படுகிறதா,
அல்லது என் கவலையைத்தான் நான் நம்ப வேண்டுமா?

“நீ ஒருபோதும் உன்னால் இயன்றதைச் செய்யவில்லை”
என்ற எண்ணத்தை அடக்கப் புரண்டு படுக்கிறேன்.
இதற்கிடையில், நான் வருந்தும் நினைவுகளோ
நான் கலங்க இன்னும் காரணங்கள் தருகின்றன.

என்னை நியாயப்படுத்த முயல்கிறேன்,
“ஏன்” என்பதற்கான என் காரணங்களையெல்லாம் மீண்டும் சொல்கிறேன்.
ஆனால் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும்,
இப்போது உறங்காமல் விழித்திருக்கும் என் ஐயங்களை அகற்ற முடிவதில்லை.

எனவே அவரிடம் வேண்டிக் காத்திருக்கிறேன்,
கவலை நெடுநேரம் விழித்திருந்து களைத்து,
வாதம் ஏதும் செய்யாமல் உறங்கும் வரை;
நானோ என்னை முழுவதும் ஒப்படைத்து ஓய்வெடுக்கிறேன்.

– அருள்பணி திமோத்தி ஜே. டிரேப்பர்

மேலும் கவிதைகள்

முதன்மைப் படம்: வில்லியம்-அடோல்ஃப் பூகெரோ (1825-1905) – வானதூதர்களின் பாடல்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: