தமிழ்

ஆன்ம நற்கருணை மன்றாட்டு

என் இயேசுவே,

நீர்

மகா பரிசுத்த நற்கருணை அருளடையாளத்தில் பிரசன்னமாயிருக்கிறீர் என நான் நம்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கிறேன்,

என் ஆன்மாவில் உம்மை ஏற்றுக்கொள்ள ஏங்குகிறேன்.

இப்போது என்னால்

அருளடையாள முறையில் உம்மைப் பெற்றுக்கொள்ள இயலாததால்,

ஆன்ம முறையிலாவது என் இதயத்தில் எழுந்தருளும்.

நீர் ஏற்கெனவே அங்கு இருப்பதுபோல் உம்மைத் தழுவிக்கொள்கிறேன்;

என்னை முழுவதுமாக உம்மோடு இணைத்துக்கொள்கிறேன்.

நான் உம்மைவிட்டுப் பிரிய ஒருபோதும் அனுமதியாதேயும்.

ஆமென்.
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: