பூமியில் உன் வாழ்நாள் வரம்புக்குட்பட்டது.
அது அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது,
நீ உணர்ந்துகொள்ளவும்
உனக்கு முன்னால் இருப்பவற்றின் அருமையை அறிந்துகொள்ளவுமே.
பின்னோக்கிப் பார்க்காதே;
முன்னோக்கி மட்டுமே பார்,
உனக்காகக் காத்திருப்பவற்றை நோக்கி.
உன் செயல்களால் நீ பல தவறுகளைச் செய்திருக்கிறாய்.
பாதிப்பு ஏற்பட்டிருந்தால்,
உன் தவறால் ஏற்பட்ட விளைவைச் சரிசெய்;
அப்போது தேவையற்ற காயங்களை நீ விட்டுச் செல்லமாட்டாய்.
அமைதியையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்த்து முன்னோக்கிப் பார்.
இது உன் தற்போதைய நிலையைத் தாண்டி உன்னை உயர்த்தும்.
உனக்காக நான் வைத்திருக்கும் மகிழ்ச்சிக்கு உன்னை வழிநடத்துவேன்,
இந்த வழிநடத்துதலை நீ கேட்டால்.
நான் உதவமாட்டேன் என்று நினைக்கிறாயா?
என்னால் உதவ முடியாது என்று நினைக்கிறாயா?
என் உதவியை உன்னால் கேட்க முடியாது என்று நினைக்கிறாயா?
கேள்; தகுந்த சந்தர்ப்பங்களில்,
அது உனக்குக் கொடுக்கப்படும்.
அஞ்சாதே,
ஏனெனில் நான் உன்னைக் காயப்படுத்தமாட்டேன்.
உன் தயக்கங்கள், அச்சங்கள், ஐயங்கள் ஆகியவற்றை ஒதுக்கிவிடு;
என்னைத் தேடுவதிலிருந்து உன்னைத் தடுக்கும் எந்தக் காரணத்தையும் ஒதுக்கிவிடு.
உன் ஆவல் முழுவதோடும் என்னைத் தேடு;
உனக்குத் தேவையான அனைத்தும் உனக்குக் கொடுக்கப்படும்,
நீ மகிழ்ச்சியுடனும் இன்பத்துடனும் இருப்பதற்காக,
பூமியில் நீ வாழும் காலத்தில்.
வரவிருப்பதன் தொடக்கமாக இக்காலம் அமையலாம்.
இந்தக் கொடையை நீ பெற்றிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
