தமிழ்

ஐயங்கள்

உன்னை வழிநடத்தும் என் வார்த்தைகளை நம்பு;
  உன் தவறான வழிகளைக் கைவிடு.
என் பாதையில் நம்பிக்கை வை
  என் அன்பை ஒருபோதும் சந்தேகிக்காதே.
நான் உன்னைத் தவறாக வழிநடத்தவோ உனக்குத் தீங்கிழைக்கவோ மாட்டேன்.

ஆகவே நீ அஞ்ச வேண்டாம்
  உனக்கெனத் திட்டமிடப்பட்டுள்ளதை எண்ணி,
  ஏனெனில் அதன் போக்கே உன்னை வழிநடத்தும்.
உன் கவனம் சிதற விடாதே
  வேதனை தருவதுபோல் தோன்றுவதைக் கண்டு.
மாறாக, வாழ்வின் சுமைகள் உன்னை
  என்னிடம் வழிநடத்தும்போது மகிழ்ந்திரு.

ஆகவே எந்தத் துன்பமும் உனக்கு ஆசியாக அமையக்கூடும்
  என்னுள் வாழவும் உனக்கு உதவக்கூடும்.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: