உன் ஐயங்கள்
உன் பார்வையை மறைக்கும்.
உன் அச்சங்கள்
உனக்குத் தடையாக இருக்கும்.
உன் தயக்கங்கள்
உன்னைத் தவறாக வழிநடத்தும்.
இந்த இடர்ப்பாடுகளை
அவற்றைப் படைத்தவரிடமே திருப்பிக் கொடு.
என் இயல்பை நாடும் ஆவல்
அதை நீ கண்டடையச் செய்யும்.
உன் தேடல்
நீ என்னைக் கண்டடைய வழிவகுக்கும்.
உன் இயல்பைக் குறித்த பொறுமை
என் இயல்பைப் புரிந்துகொள்ள உனக்கு உதவும்.
என் உடனிருப்பை நீ உணர்வாய்
என் இயல்புக்கு உன் உள்ளத்தைத் திறக்கும்போது.
என்னைக் கேள்,
நான் உன்னைக் கண்டடைவேன்.
என்னை நோக்கிக் கைகளை நீட்டு,
நான் அங்கே உன்னுடன் இருப்பேன்.
ஒரு கணம்கூட
நான் இன்றி உனக்குக் கடந்துசெல்லாது.
எந்த நிகழ்வின் தொடக்கமும்
முடிவும் நான் உன்னுடன் இல்லாமல் நிகழாது.
