தமிழ்

என் செல்வம்

உன் இதயத்தைத் திறந்திடு.
உன் கவலைகளை விட்டுவிடு.
ஏனெனில், எந்தத் துன்பமும் உன்னை விழுங்கிவிடாது,
  என்னோடு நீ நடக்கையில்.

எந்தத் துயர நிகழ்வுதான் உன்னை விழுங்கிவிட முடியும்,
  நீ என்னை நோக்கியிருக்கையில்?

எந்த இடர்பாடும் தாங்க முடியாத அளவுக்குக் கடுமையானதல்ல,
  எந்த அநீதியும் மாற்ற முடியாததல்ல.

உன் கையறு நிலையிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்,
  உன் நிலைமையை மாற்றுவேன்.
என் பாதையில் நடந்திடு
  என் உடனிருப்பு உனக்கு ஆறுதல் அளிக்கட்டும்.

ஏனெனில், நீ என் பொக்கிஷம்,
  எந்தத் தீங்கும் உனக்குச் சுமையாகாது.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: