தமிழ்

ஆண்டவரின் விண்ணேற்றத்திற்கான செபத் தியானம்

ஆண்டவராகிய இயேசுவே, மரியாவின் மகனே, என் மீட்பரும் என் சகோதரருமானவரே, நீர் கடவுளாக இருப்பதால் உம்மை ஆராதிக்கிறேன். எம் மனித குலத்தின் முதற்கனியே, என் எண்ணங்களில் உம்மைப் பின்தொடர்கிறேன்; ஒருநாள் உமது அருளால் நானும் நேரில் உம்மைப் பின்தொடர்ந்து விண்ணக மாட்சிக்குள் நுழைவேன் என நம்புகிறேன். அதுவரை, நீர் எனக்குக் கொடுத்துள்ள இவ்வுலகப் பணியை நான் புறக்கணிக்க விடாதேயும். நிகழ்காலத்தின் மதிப்பை இன்னும் ஆழமாக உணர்ந்து, என் வாழ்நாள் முழுவதும் அக்கறையுடன் உழைக்கச் செய்தருளும். மனித வாழ்வின் உண்மையான நிறைவை அடைவதன் வழியாக மட்டுமே நான் இறை நிறைவை அடைந்து, என் பணி நிறைவுறும்போது உம்மிடம் மேலெழுந்து வர முடியும் என்பதை உணரச் செய்தருளும்.

ஆமென்.


மேலும் வாசிக்க – விண்ணேற்றம்

ஆண்டவரின் விண்ணேற்றத்திற்கான சிந்தனை

மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: