
இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்
புனித மரியா பவுஸ்தினா கோவால்ஸ்காவின் நாட்குறிப்பு, பதிவு #949
+
JMJ பிப்ரவரி 12, 1937
+இறைவனின் அன்பு மலர் – இரக்கம் அதன் கனி.
ஐயம்கொள்ளும் ஆன்மா, இறை இரக்கத்தைப் பற்றிய இந்தச் சிந்தனைகளை வாசித்து நம்பிக்கைகொள்ளட்டும்.
தந்தையின் நெஞ்சத்திலிருந்து பொங்கிப் பெருகும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கடவுளின் மிக உயர்ந்த பண்பாகிய இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புரிந்துகொள்ள இயலாத மறைபொருளாகிய இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
அதிபுனித மூவொரு கடவுளின் மறைபொருளிலிருந்து பொங்கிப் பெருகும் ஊற்றாகிய இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
மனிதருடைய அறிவாலும் வானதூதருடைய அறிவாலும் ஆழம் காண இயலாத இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
உயிரும் மகிழ்ச்சியும் அனைத்தும் பொங்கியெழும் ஊற்றாகிய இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வானங்களைவிட மேலான இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புதுமைகளுக்கும் வியத்தகு செயல்களுக்கும் ஊற்றாகிய இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
அண்டம் முழுவதையும் சூழ்ந்துள்ள இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்
மனிதரான இறைவாக்கின் இறை ஆளில் மண்ணுலகிற்கு இறங்கி வரும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் இதயத்தில் திறந்திருந்த காயத்திலிருந்து வழிந்தோடிய இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
எங்களுக்காகவும், சிறப்பாகப் பாவிகளுக்காகவும் இயேசுவின் இதயத்தில் பொதிந்திருக்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புனித நற்கருணை அப்பத்தை ஏற்படுத்தியதில் ஆழம் காண இயலாத இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புனித திருஅவையை நிறுவியதில் விளங்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புனித திருமுழுக்கு அருளடையாளத்தில் விளங்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் வழியாக நாங்கள் நீதிமானாக்கப்படுவதில் விளங்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுடன் வரும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
சிறப்பாக இறக்கும் வேளையில் எங்களை அரவணைக்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
எங்களுக்கு இறவா வாழ்வை அளிக்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் எங்களுடன் வரும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
நரக நெருப்பிலிருந்து எங்களைக் காக்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கடின உள்ளம் கொண்ட பாவிகளின் மனமாற்றத்தில் விளங்கும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வானதூதர்களுக்கு வியப்பளிப்பதும் புனிதர்களாலும் புரிந்துகொள்ள இயலாததுமான இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கடவுளின் மறைபொருள்கள் அனைத்திலும் ஆழம் காண இயலாத இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
எல்லாத் துயரங்களிலிருந்தும் எங்களைத் தூக்கிவிடும் இறை இரக்கமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
எங்கள் மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஊற்றாகிய இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை இருப்புக்கு அழைக்கும் இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இறைவனின் கரங்கள் படைத்த அனைத்தையும் அரவணைக்கும் இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இறைவனின் படைப்புகள் அனைத்திற்கும் மகுடமாகிய இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
நாங்கள் அனைவரும் மூழ்கியிருக்கும் இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வேதனையுறும் இதயங்களுக்கு இனிய ஆறுதலாகிய இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
நம்பிக்கையிழந்த ஆன்மாக்களின் ஒரே நம்பிக்கையாகிய இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இதயங்களின் இளைப்பாறுதலாகவும் அச்சத்தின் நடுவே அமைதியாகவும் விளங்கும் இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புனித ஆன்மாக்களின் மகிழ்ச்சியும் பரவசமுமாகிய இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
நம்பிக்கைக்கு இடமே இல்லாதபோதும் நம்பிக்கையூட்டும் இறை இரக்கமே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
+ நித்திய இறைவனே, உம்மில் இரக்கம் ஆழங்காண முடியாததாகவும் பரிவின் கருவூலம் வற்றாததாகவும் உள்ளது. எங்களைக் கனிவுடன் கண்ணோக்கி, எங்களில் உமது இரக்கத்தைப் பெருகச் செய்தருளும். இதனால், கடினமான தருணங்களில் நாங்கள் நம்பிக்கையிழக்காமலும் மனந்தளராமலும், அன்பும் இரக்கமுமேயான உமது திருவுளத்திற்கு மிகுந்த நம்பிக்கையுடன் எங்களையே ஒப்படைப்போமாக” (நாட்குறிப்பு 950).
+ ஓ, புரிந்துகொள்ள இயலாத, எல்லையற்ற இறை இரக்கமே, உம்மைத் தகுந்த முறையில் போற்றவும் ஆராதிக்கவும் யாரால் இயலும்? எல்லாம் வல்ல இறைவனின் உன்னதப் பண்பே, பாவியான மனிதனுக்கு நீரே இனிய நம்பிக்கை. விண்மீன்களே, மண்ணுலகே, கடலே, ஒரே புகழ்ப்பாடலாக ஒன்றிணையுங்கள்; புரிந்துகொள்ள இயலாத இறை இரக்கத்தைப் பற்றி ஒருமனத்துடன், நன்றியோடும் ஆர்வத்தோடும் பாடுங்கள் (நாட்குறிப்பு 951).
மேலும் சில இறை இரக்கச் செபங்கள்
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை: © உரைத் தொகுப்பு – உர்சுலா க்ஷெகோர்ச்சிக் ஆலோசனை – அருட்சகோதரி மரியா கலினோவ்ஸ்கா, இரக்கமுள்ள இயேசுவின் அருட்சகோதரிகள் சபை. மூலத்தின் முழுப் பெயரையும் குறிப்பிட்டால் மட்டுமே இந்த உரைகளை நகலெடுக்கலாம்© மொழிபெயர்ப்பு: ஏவா ஒல்ஷோவா, உரைச் செம்மையாக்கம்: மேத்யூ வினால்
இறை இரக்கத் திருவுருவம் – அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. © இரக்கமுள்ள இயேசுவின் அருட்சகோதரிகள் சபை.
