தமிழ்

ஒப்படைப்பு இறைவேண்டல்

பெர்லின் ஓவியக் காட்சியகம், பொதுப் பயன்பாட்டில், Wikimedia Commons வழியாக

தந்தையே,

உமது கைகளில் என்னையே ஒப்படைக்கிறேன்;

உமது விருப்பப்படி என்னை நடத்தும்.

நீர் எதைச் செய்தாலும், உமக்கு நன்றி கூறுகிறேன்:

எல்லாவற்றிற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.

உமது திருவுளம் மட்டுமே என்னில் நிறைவேறட்டும்,

உமது படைப்புகள் அனைத்திலும் அவ்வாறே நிறைவேறட்டும் –

ஆண்டவரே, இதற்கு மேல் நான் எதையும் விரும்பவில்லை.

என் ஆன்மாவை உமது கைகளில் ஒப்படைக்கிறேன்:

என் இதயத்தின் அன்பு முழுவதோடும் அதை உமக்கு அர்ப்பணிக்கிறேன்,

ஏனெனில், ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; ஆகவே என்னையே உமக்கு அளித்து,

எதையும் எனக்கென வைத்துக்கொள்ளாமல் உமது கைகளில் என்னையே ஒப்படைக்க வேண்டியிருக்கிறது,

அளவற்ற நம்பிக்கையுடன்,

ஏனெனில் நீரே என் தந்தை.

ஆமென்.

புனித சார்லஸ் தெ ஃபூக்கோ


மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: