உன் அன்றாட வாழ்வில் என் உடனிருப்பைத் தேடு.
நான் உன்னோடு இருக்கிறேன்,
ஆனால் என் உடனிருப்பை நீ உணர்வதில்லை.
நான் உன்னோடு இருக்கிறேன் என்பதில் உறுதியாக இரு.
என் நன்மைத்தனத்தில் உன் விசுவாசத்தை வளர்த்துக்கொள்,
நான் உனக்கு உதவி செய்து உன்னை வழிநடத்துவேன் என்று நம்பு.
உன் ஐயங்கள் உன் விசுவாசத்தை வளர்க்காது.
நீ உன்னையே சார்ந்திருப்பது உனக்கு வலிமை தராது.
உன் விசுவாசத்திலிருந்து உன்னை விலக்குகின்ற
இந்தத் தடைகளை அகற்றிவிடு.
என்னிடமிருந்து உன்னை விலக்குகின்றவற்றைச்
சார்ந்திருப்பதை விட்டுவிடு.
ஒவ்வொரு நாளும் நீ சந்திப்பவர்களுக்கு
உன்னையே வழங்கு.
அவர்களுடைய கவலைகளைத் தணிக்கும் அமைதியைக் கொண்டுசெல்.
தேவையில் இருப்போருக்கு ஞானத்தை வழங்கு.
தவறாக வழிநடத்தப்படுவோருக்கு வழிகாட்டு.
எளிய உள்ளத்தோர் என்னை அறிந்துகொள்ளும்படி
அவர்களை வலுப்படுத்து.
இந்தக் கனிகளைத் தேடி விரும்பு;
நீ வளம்பெறவும், ஒவ்வொரு நாளும் உன் பாதையில்
சந்திப்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும் இவற்றை நாடு.
என் கொடைகளால் உன்னை நிரப்ப எனக்கு இடங்கொடு;
இந்த நன்மைகள் பிறருக்கும் வழங்கப்படட்டும்.
என் இயல்பைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள
வேண்டியவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்து.
உன் வழியாகச் செயலாற்றவும், இந்த நோக்கத்திற்காக
உன்னைப் பயன்படுத்தவும் எனக்கு இடங்கொடு.
