இந்த நவநாள் செபத்தை ஆண்டின் எந்த நேரத்திலும் செபிக்கலாம். குறிப்பாக, பொதுக்காலத்தின் முப்பத்திரண்டாம் வார வெள்ளிக்கிழமை முதல் முப்பத்துமூன்றாம் வார சனிக்கிழமை வரை (அனைத்துலக அரசராம் இயேசு கிறிஸ்துவின் பெருவிழாவுக்கு முந்தைய ஒன்பது நாள்கள்) செபிக்கலாம்.
அனைத்துலக அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெருவிழா
அன்றாட நவநாள் செபங்கள்:
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்.
எல்லாம் வல்லவரும் இரக்கமுள்ளவருமான இறைவா, அனைத்துலக அரசரான உம் திருமகன் இயேசு கிறிஸ்துவில் தீமையின் வல்லமையை முறியடித்து, அனைத்தையும் புதிதாக்குகிறீர். விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் உமது மாட்சியைப் போற்றிப் பறைசாற்றி, இடையறாது உம்மைப் புகழ்வார்களாக.
உம்மோடும் தூய ஆவியாரோடும் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வழியாக இதனை வேண்டுகிறோம். ஆமென்.
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே…
அருள் நிறைந்த மரியே, வாழ்க…
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக…
செபிப்போமாக:
எங்கள் ஆண்டவராகிய இறைவா, நீர் ஒருவரே அனைத்தினங்களுக்கும் அதிதூய அரசரும் ஆட்சியாளரும் ஆவீர்.
ஆண்டவரே, தெய்வீக அரசரே, உம்மிடமிருந்து இரக்கத்தையும் அமைதியையும் நீதியையும் எல்லா நன்மைகளையும் பெறுவோம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உம்மை வேண்டுகிறோம்.
எங்கள் அரசராம் ஆண்டவரே, எங்கள் குடும்பங்களையும் நாங்கள் பிறந்த நாட்டையும் பாதுகாத்தருளும்.
மிகவும் நம்பிக்கைக்குரியவரே, எங்களைக் காத்தருள வேண்டுகிறோம்.
எங்கள் பகைவர்களிடமிருந்தும் உமது நீதியான தீர்ப்பிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும்.
அனைத்தையும் ஆளும் அரசரே, உமக்கு எதிராக நாங்கள் செய்த பாவங்களை மன்னித்தருளும்.
இயேசுவே, நீர் இரக்கத்தின் அரசர்.
உமது நீதியான தீர்ப்புக்கு நாங்கள் தகுதியானவர்களாகியுள்ளோம்.
ஆண்டவரே, எங்கள் மீது இரக்கமாயிருந்து எங்களை மன்னித்தருளும்.
உமது மாபெரும் இரக்கத்தில் நம்பிக்கை வைக்கிறோம்.
பெரும் அச்சமும் வியப்பும் எழச் செய்யும் அரசரே, உம்முன் பணிந்து வேண்டுகிறோம்;
உமது ஆட்சியும் உமது அரசும் மண்ணுலகில் ஏற்றுக்கொள்ளப்படுவனவாக.
ஆமென்.
விரும்பினால்: அமைதிக்கான செபங்கள்
படம்: “அனைத்துலக அரசராம் கிறிஸ்து,” புகைப்படம் எடுத்தவர்: லாரன்ஸ், O.P.
