தமிழ்

புனிதர்கள் மன்றாட்டு மாலை

ஆண்டவரே, இரக்கமாயிரும்.  ஆண்டவரே, இரக்கமாயிரும்

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.  கிறிஸ்துவே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும்.  ஆண்டவரே, இரக்கமாயிரும்

கிறிஸ்துவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.  கிறிஸ்துவே, கனிவுடன் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

 

கீழே உள்ள ஒவ்வொரு பதிலுக்குப் பின்னும் சொல்ல வேண்டிய மன்றாட்டு:

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எங்கள் விண்ணகத் தந்தையாகிய இறைவா,

உலகின் மீட்பராகிய இறைமகனே,

தூய ஆவியாராகிய இறைவா,

ஒரே இறைவனாகிய தூய திரித்துவமே,

 

கீழே உள்ள ஒவ்வொரு பதிலுக்குப் பின்னும் சொல்ல வேண்டிய மன்றாட்டு:

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் புனித அன்னையே,

கன்னியருள் புனித கன்னியே,

புனித மிக்கேலே,

புனித கபிரியேலே,

புனித இரபேலே,

புனித வானதூதர்களே, அதிதூதர்களே, நீங்கள் அனைவரும்,

பேறுபெற்ற ஆவிகளின் புனித அணியினர் அனைவரே,

புனித திருமுழுக்கு யோவானே,

புனித யோசேப்பே,

புனித குலமுதல்வர்களே, இறைவாக்கினர்களே, நீங்கள் அனைவரும்,

புனித பேதுருவே,

புனித பவுலே,

புனித அந்திரேயாவே,

புனித யாக்கோபே,

புனித யோவானே,

புனித தோமாவே,

புனித யாக்கோபே,

புனித பிலிப்பே,

புனித பர்த்தலமேயுவே,

புனித மத்தேயுவே,

புனித சீமோனே,

புனித ததேயுவே,

புனித மத்தியாவே,

புனித பர்னபாவே,

புனித லூக்காவே,

புனித மாற்கே,

புனித திருத்தூதர்களும் நற்செய்தியாளர்களுமாகிய அனைவரே,

ஆண்டவரின் புனித சீடர்கள் அனைவரே,

புனித மாசில்லாக் குழந்தைகள் அனைவரே,

புனித ஸ்தேவானே,

புனித லாரன்சியாரே,

புனித வின்சென்ட்டே,

புனித பபியானே, புனித செபஸ்தியாரே,

புனித யோவானே, புனித பவுலே,

புனித கோஸ்மாஸே, புனித தமியானே,

புனித கெர்வாசியாரே, புனித புரோத்தாசியாரே,

புனித மறைசாட்சிகள் அனைவரே,

புனித சில்வெஸ்டரே,

புனித கிரகோரியாரே,

புனித அம்புரோசே,

புனித அகுஸ்தினாரே,

புனித எரோணிமுஸே,

புனித மார்ட்டினே,

புனித நிக்கொலாசே,

புனித ஆயர்களும் மறை அறிக்கையாளர்களுமாகிய அனைவரே,

புனித மறைவல்லுநர்கள் அனைவரே,

புனித அந்தோனியாரே,

புனித பெனடிக்டே,

புனித பெர்னார்தே,

புனித தோமினிக்கே,

புனித பிரான்சிஸ்குவே,

புனித அருள்பணியாளர்களும் திருப்பணியாளர்களுமாகிய அனைவரே,

புனித துறவிகளும் தனிமைத் தவத்துறவிகளுமாகிய அனைவரே,

புனித மகதலா மரியாவே,

புனித அகத்தாவே,

புனித லூசியாவே,

புனித ஆக்னஸே,

புனித செசிலியாவே,

புனித கத்தரீனாவே,

புனித அனஸ்தாசியாவே,

புனித கன்னியர், கைம்பெண்களாகிய நீங்கள் அனைவரும்,

கடவுளின் புனிதர்களாகிய நீங்கள் அனைவரும்,

 

கீழே உள்ள ஒவ்வொரு மன்றாட்டிற்கும் பதிலுரை:

ஆண்டவரே, உமது மக்களைக் காப்பாற்றும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஆண்டவரே, உமது மக்களைக் காப்பாற்றும்

எல்லாத் தீமைகளிலிருந்தும்,

எல்லாப் பாவங்களிலிருந்தும்,

உமது கோபத்திலிருந்து,

திடீரெனவும் எதிர்பாராமலும் வரும் இறப்பிலிருந்து,

அலகையின் கண்ணிகளிலிருந்து,

கோபம், வெறுப்பு, எல்லாத் தீய எண்ணங்களிலிருந்தும்,

தூய்மையற்ற ஆவியிலிருந்து,

மின்னல், புயலிலிருந்து,

நிலநடுக்கத்தின் பேரழிவிலிருந்து,

கொள்ளைநோய், பஞ்சம், போரிலிருந்து,

நித்திய மரணத்திலிருந்து,

நீர் மனிதரான புனித மறைபொருளின் வழியாக,

உமது வருகையின் வழியாக,

உமது பிறப்பின் வழியாக,

உமது திருமுழுக்கு, புனித நோன்பின் வழியாக,

உமது சிலுவை, பாடுகளின் வழியாக,

உமது இறப்பு, அடக்கத்தின் வழியாக,

உமது புனித உயிர்ப்பின் வழியாக,

உமது வியத்தகு விண்ணேற்றத்தின் வழியாக,

துணையாளராம் தூய ஆவியாரின் வருகையின் வழியாக,

தீர்ப்பு நாளில்,

 

கீழே உள்ள ஒவ்வொரு மன்றாட்டிற்கும் பதிலுரை:

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பாவிகளாகிய எங்களுக்கு இரங்கும்; ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நீர் எங்களைத் தண்டியாமல் விட்டருள வேண்டுமென்று,

நீர் எங்களை மன்னித்தருள வேண்டுமென்று,

நீர் திருவுளங்கொண்டு எங்களை உண்மையான மனமாற்றத்திற்கு இட்டுச் செல்ல வேண்டுமென்று,

உமது புனிதத் திருஅவையை வழிநடத்திக் காத்தருள வேண்டுமென்று,

திருத்தந்தையையும் திருப்பட்டம் பெற்ற அனைவரையும் புனித இறைநெறியில் நிலைநிறுத்திக் காத்தருள வேண்டுமென்று,

புனிதத் திருஅவையின் பகைவர்களைத் தாழ்த்த வேண்டுமென்று,

கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் அமைதியையும் ஒற்றுமையையும் அளிக்க வேண்டுமென்று,

வழிதவறிச் செல்கின்ற அனைவரையும் திருஅவையின் ஒன்றிப்புக்குத் திரும்ப அழைக்கவும், நம்பிக்கை கொள்ளாத அனைவரையும் நற்செய்தியின் ஒளிக்கு இட்டுச் செல்லவும் வேண்டுமென்று,

உமது புனிதப் பணியில் எங்களை வலுப்படுத்தி நிலைநிறுத்திக் காத்தருள வேண்டுமென்று,

விண்ணகத்திற்குரியவற்றை நாடும்படி எங்கள் மனங்களை உயர்த்த வேண்டுமென்று,

எங்களுக்கு நன்மை செய்த அனைவருக்கும் நிலைவாழ்வின் ஆசிகளைக் கைம்மாறாக அளிக்க வேண்டுமென்று,

எங்கள் ஆன்மாக்களையும், எங்கள் சகோதரர்கள், உறவினர்கள், எங்களுக்கு நன்மை செய்தவர்கள் ஆகியோரின் ஆன்மாக்களையும் நித்திய நரகத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று,

நிலத்தின் விளைச்சலைத் தந்து காத்தருள வேண்டுமென்று,

இறந்த இறைநம்பிக்கையாளர் அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளிக்க வேண்டுமென்று, உயிருள்ள கடவுளின் மகனாகிய இயேசுவே, நீர் திருவுளங்கொண்டு எங்கள் மன்றாட்டைக் கேட்டுச் செவிசாய்க்க வேண்டுமென்று,

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

ஆண்டவரே, எங்களைத் தண்டியாமல் விட்டருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். கிறிஸ்துவே, எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும்.

ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.  ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.  ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.  கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.  ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆமென்.


மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: