தமிழ்

கட்டளையிடும் செபம்

இயேசுவின் பெயராலும், அவரது சிலுவை மற்றும் திருஇரத்தத்தின் வல்லமையாலும், நிலம், காற்று, நெருப்பு அல்லது நீர் ஆகியவற்றைச் சார்ந்தவையும், பாதாள உலகைச் சார்ந்தவையுமான தீய ஆவிகள், சக்திகள், அதிகாரங்கள் அனைத்தையும், இயற்கையின் சாத்தானியச் சக்திகள் அனைத்தையும் கட்டிப்போடுமாறு இயேசுவை வேண்டுகிறேன்.

தூய ஆவியாரின் வல்லமையாலும் அவரது அதிகாரத்தாலும், இயேசு கிறிஸ்துவின் திருவுளத்திற்கு ஏற்ப இருக்குமாயின், சாபங்கள், செய்வினைகள் அல்லது மந்திரக்கட்டுகள் அனைத்தையும் முறியடித்து, அவை வந்த இடத்திற்கே அவற்றைத் திருப்பி அனுப்புமாறு அவரை வேண்டுகிறேன்.

ஆண்டவராகிய இயேசுவே, எங்களுக்காக நீர் சிந்திய உமது விலைமதிப்பற்ற திருஇரத்தத்தை எங்கள்மீது (என் குடும்பத்தினர் முதலானோர்மீது) பொழிந்து எங்களைக் காத்தருளுமாறு உம்மை மன்றாடுகிறேன். வெளியேறும் ஆவிகள் அனைத்தும் எந்த இடையூறும் விளைவிக்காமல் அமைதியாக வெளியேறி, நீர் தகுந்தவாறு அவற்றைக் கையாளும்பொருட்டு நேராக உமது சிலுவையிடம் செல்லுமாறு நீர் கட்டளையிட வேண்டுகிறேன்.

பேய்களின் பரஸ்பரச் செயல்பாடுகள், ஒன்றையொன்று சார்ந்த இயக்கங்கள் அல்லது தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் கட்டிப்போடுமாறு உம்மை வேண்டுகிறேன்.

இயேசு கிறிஸ்து நமக்காகச் சிந்திய திருஇரத்தத்தின் பாதுகாப்பின்கீழ் N. (நபர், இடம் அல்லது பொருள்) என்பதை ஒப்படைக்கிறேன்.

ஆமென்.


அனைத்து செபங்களும்

ஆன்மிகப் போராட்டத்திற்கான மேலும் பல செபங்கள்

சிறப்புப் படம்: ஃப்ரா ஆஞ்செலிக்கோ, நீதிபதியாகிய கிறிஸ்து

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: