தமிழ்

இறைப் புகழ்ச்சி

அசிசி நகர் புனித பிரான்சிஸின் செபம்

ஒரே கடவுளாகிய ஆண்டவரே, நீர் தூயவர்,

உமது செயல்கள் வியப்புக்குரியவை.

நீர் வலிமைமிக்கவர்.

நீர் மாட்சிமைமிக்கவர்.

நீர் உன்னதமானவர்.

நீர் எல்லாம் வல்லவர்.

தூய தந்தையே, நீரே விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசர்.

ஆண்டவராகிய கடவுளே, நீர் மூவொருவராய் இருக்கிறீர்; நீரே முழு நன்மை.

வாழும் உண்மைக் கடவுளாகிய ஆண்டவரே, நீரே நன்மை, முழு நன்மை, ஒப்புயர்வற்ற நன்மை.

நீரே அன்பு. நீரே ஞானம்.

நீரே தாழ்ச்சி. நீரே சகிப்புத்தன்மை.

நீரே இளைப்பாற்றி. நீரே அமைதி.

நீரே மகிழ்ச்சியும் களிப்பும்.

நீரே நீதியும் அளவுடைமையும்.

நீரே எங்கள் செல்வமெல்லாம்; நீரே எங்களுக்குப் போதுமானவர்.

நீரே அழகு.

நீரே கனிவு.

நீரே எங்கள் பாதுகாவலர்.

நீரே எங்களைக் காத்துப் பேணுபவரும் எங்களுக்காகப் போராடுபவரும்.

நீரே எங்கள் துணிவு. நீரே எங்கள் புகலிடமும் நம்பிக்கையும்.

நீரே எங்கள் விசுவாசம், எங்கள் பேராறுதல்.

மாட்சிமையும் வியப்பும் மிக்க ஆண்டவரே, நீரே எங்கள் நிலைவாழ்வு,

எல்லாம் வல்ல கடவுளே, இரக்கமுள்ள மீட்பரே.

ஆமென்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ்


மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: