ஆராதிக்க நேரம் ஒதுக்கு.
துதிக்கும் இந்நேரம் உனக்கு ஆறுதல் அளிக்கட்டும்.
என் ஆசீரைப் பெற உன் ஆன்மாவை என்னிடம் கொண்டுவா.
இந்நேரம் உன்னை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கட்டும்,
ஏனெனில் நீ என்னோடு இருக்க நான் காத்திருக்கிறேன்.
கவனச்சிதறல்களிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்
உன் ஆன்மாவை என்னிடம் ஒப்படை,
ஏனெனில் என் அருள் உன் முயற்சிக்குப் பலனளிக்கும்.
என்னோடு இருக்கும் நேரம் புனிதமானது.
என்னோடு இருக்கும் நேரம் அமைதியைக் கொண்டுவரும்.
என்னோடு இருக்கும் நேரம் உன் மனதை ஒரு புதிய மூலைக்கல்லின்மீது நிலைநிறுத்தும்,
உனக்காகக் காத்திருக்கும் மறைபொருள்களை நீ கேட்டறியும்படி.
என்னோடு நீ செலவிடும் நேரத்திற்குப் பலனாக நீ அறியாத ஆசிகள் உனக்குக் கிடைக்கும்,
ஏனெனில் நீ என் பிள்ளை,
நான் உன்னைப் பேணிக்காப்பேன்.
