
மிகுந்த மகிமையுடையவரும் துன்புறுபவருமான என் ஆண்டவரே, இது உமது வேளை. பாவத்தையும் மரணத்தையும் நீர் வென்ற வேளை இதுவே. உலகின் மீட்புக்காக உமது விலைமதிப்பற்ற உயிரை ஒப்புக்கொடுக்கும்படி, நீர் மனித உடலெடுத்து இவ்வுலகிற்கு வந்தது இந்த வேளைக்காகவே.
அன்பு ஆண்டவரே, துன்பமும் மரணமும் சூழ்ந்த இந்த நேரங்களில் நான் உம்மோடு இருக்க அருளும். உமது தாயையும் யோவானையும் மகதலா மரியாவையும் போல, அன்பின் நிறைவான கொடையை உற்றுநோக்கியவாறு நானும் சிலுவையின் அடியில் நிற்க அருளும்.
துன்புறும் என் ஆண்டவரே, இவ்வுலகம் இதுவரை அறிந்தவற்றுள் மிக நிறைவான செயலை உமது சிலுவையில் நான் காண அருளும். அன்பை அதன் மிகத் தூய வடிவில் நான் காண அருளும். இரத்தத்தையும் வலியையும் கடந்து, என்மீதும் உலகம் முழுவதன்மீதும் இரக்கத்தைப் பொழியும் உமது தெய்வீக இதயத்தை என் கண்களும் ஆன்மாவும் காண அருளும்.
என் இறைவனே, இன்று நான் முழந்தாளிட்டு மௌனமாக உம்மை ஆராதிக்கிறேன். நமது நம்பிக்கையின் மாபெரும் மறைபொருளைத் தியானித்தவாறு அமைதியாக அமர்ந்திருக்கிறேன். அடிக்கப்பட்டு, காயமடைந்து, ஏளனம் செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட இறைவனை நான் காண்கிறேன். ஆயினும், இச்செயலில் உமது காயமடைந்த இதயத்திலிருந்து அருளும் இரக்கமும் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதைக் காண்கிறேன். அன்பு ஆண்டவரே, உமது இரக்கத்தால் உலகை நனைத்தருளும். உமது அருளால் எங்களைப் போர்த்தி, உமது மரணத்தின் வழியாகப் புதிய வாழ்வுக்கு எங்களை ஈர்த்தருளும். அன்பு ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். என் முழு இதயத்தோடும் உம்மை நேசிக்கிறேன். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இதையும் காண்க:
அன்புடன் சிலுவையருகில் நிற்றல்
அன்பின் மாபெரும் செயல் நிகழ்கிறது
இறுதி ஏழு வார்த்தைகள் – புனித வெள்ளிக்கான நற்செய்திச் சிந்தனை
சிலுவையிலிருந்து ஓர் இறைவேண்டல்
இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள் செபம் (நவநாள் செபத்தின் முதல் நாள்)
அனைத்து நற்செய்திச் சிந்தனைகளும்
செபமாலை – துயர மறையுண்மைகள் (திருவிவிலியப் பகுதிகளுடன்)
சிலுவைத் திருவுருவத்தின் முன் செபம்
உத்தரிப்பு நிலையிலுள்ளோருக்கான செபம்
கடவுள்மீது மேலும் ஆழ்ந்த அன்பு
பிறரை மன்னிக்கும் இரக்கத்தை வேண்டிச் செபமாலை
புனித பவுஸ்தீனாவின் இறை இரக்க மன்றாட்டுமாலை
புனித வாரத்திற்கான அனைத்து அன்றாடச் சிந்தனைகள்
