நம்பிக்கையிழக்கச் செய்யும் சூழ்நிலைகளிலும் நம்பிக்கையற்ற நிலைகளிலும் செபிக்க
ஆண்டின் எந்தக் காலத்திலும் இதைச் செபிக்கலாம். குறிப்பாக, அக்டோபர் 28 அன்று கொண்டாடப்படும் புனிதர்கள் சீமோன், யூதா ஆகியோரின் திருவிழாவுக்குத் தயாரிப்பாக அக்டோபர் 19–27 வரை செபிக்கலாம்.
உங்கள் செபக் கருத்துகளில் அமைதிக்கான செபங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து ஒன்பது நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் பின்வரும் செபத்தைச் சொல்லுங்கள். இது புனித யூதாவுக்கான பாரம்பரிய நவநாள் செபம்; ஆண்டின் எந்தக் காலத்திலும் இதைச் செபிக்கலாம்:
மிகவும் புனிதரான திருத்தூதர் புனித யூதாவே, இயேசுவின் உண்மையுள்ள ஊழியரும் நண்பருமான உம்மை, கடினமான சூழ்நிலைகளிலும் ஏறக்குறைய நம்பிக்கையிழந்த நிலைகளிலும் உதவும் பாதுகாவலராக உலகெங்கும் திருஅவை போற்றி அழைக்கிறது. எனக்காக வேண்டிக்கொள்ளும்; நான் மிகவும் உதவியற்றுத் தனிமையில் இருக்கிறேன்.
உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையே ஏறக்குறைய அற்றுப்போன நிலையில், கடவுள் வெளிப்படையான, விரைவான உதவியை அளிக்கும்படி எனக்காக அவரிடம் பரிந்துபேசும். எனது தேவைகள், இடையூறுகள், துன்பங்கள் அனைத்திலும், குறிப்பாகப் பின்வரும் தேவைகளில், விண்ணகத்தின் ஆறுதலையும் உதவியையும் நான் பெறும்படி, இந்தப் பெரும் தேவையில் எனக்குத் துணையாக வாரும்:
(இப்போது உங்களுடைய பிற தனிப்பட்ட வேண்டுதல்களைச் சொல்லுங்கள்.)
நானும் எல்லா மக்களும் உம்மோடும் புனிதர்கள் அனைவரோடும் இணைந்து கடவுளை என்றென்றும் புகழ்வோமாக. பேறுபெற்ற புனித யூதாவே, கடவுள் எனக்கு அருளிய இந்தப் பேருதவியை எப்போதும் நினைவில் கொள்வேன் என்றும், உம்மை எனது தனிப்பட்ட, வல்லமையுள்ள பாதுகாவலராக எப்போதும் போற்றுவேன் என்றும், நன்றியுடன் உம்மீதான பக்தியை ஊக்குவிப்பேன் என்றும் வாக்களிக்கிறேன். ஆமென்
இயேசுவின் அதிதூய திருஇதயம் உலக முடிவுவரை எல்லா நற்கருணைப் பேழைகளிலும் ஆராதிக்கப்படுவதாக, அன்பு செய்யப்படுவதாக.
இயேசுவின் அதிதூய திருஇதயம் இப்போதும் என்றென்றும் புகழப்பட்டு மகிமைப்படுத்தப்படுவதாக.
புனித யூதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்; எங்கள் செபங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
இயேசுவின் திருஇதயம் போற்றப்படுவதாக
மரியாவின் மாசற்ற இதயம் போற்றப்படுவதாக
புனித யூதா ததேயு உலகெங்கும் என்றென்றும் போற்றப்படுவாராக.
(இப்போது செபிக்க வேண்டியவை: பரலோக மந்திரம் மற்றும் அருள் நிறை மந்திரம்.)
சிறப்புக் கருத்து: அமைதிக்கான செபங்கள்
புனித யூதாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
