
முன்னுரைப்பவர் – ஆண்டவரின் தூதர் மரியாவுக்குச் செய்தி அறிவித்தார்.
பதில் – அவர் தூய ஆவியால் கருவுற்றார்.
(அருள் நிறைந்த மரியே….)
முன்னுரைப்பவர் – இதோ, ஆண்டவரின் அடிமை நான்.
பதில் – உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்.
(அருள் நிறைந்த மரியே….)
முன்னுரைப்பவர் – வாக்கு மனிதர் ஆனார்.
பதில் – நம்மிடையே குடிகொண்டார்.
(அருள் நிறைந்த மரியே….)
முன்னுரைப்பவர் – இறைவனின் தூய தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பதில் – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படியாக.
ஆமென்.