தமிழ்

மரியாவின் புகழ்ப்பாடல்

லூக்கா 1:46-55

என் ஆன்மா ஆண்டவரின் பெருமையைப் பறைசாற்றுகின்றது,
என் மீட்பராம் கடவுளில் என் உள்ளம் பேருவகை கொள்கின்றது
ஏனெனில், தாழ்நிலையிலுள்ள தம் அடிமையை அவர் கனிவுடன் கண்ணோக்கியுள்ளார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்:
எல்லாம் வல்லவர் எனக்கு மாபெரும் செயல்களைச் செய்துள்ளார்,
அவரது பெயர் தூயது.

அவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு இரக்கம் காட்டுகின்றார்
தலைமுறைதோறும்.

அவர் தமது தோளின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளார்,
உள்ளத்தில் செருக்குற்றோரைச் சிதறடித்துள்ளார்.

வலியோரை அரியணைகளிலிருந்து வீழ்த்தியுள்ளார்,
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தியுள்ளார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்,
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிட்டார்.

தம் ஊழியராம் இஸ்ரயேலுக்குத் துணைநிற்க வந்துள்ளார்
ஏனெனில், இரக்கம் காட்டுவதாகத் தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்துள்ளார்,
நம் முன்னோருக்கு அவர் அளித்த வாக்குறுதியை,
ஆபிரகாமுக்கும் அவருடைய வழிமரபினருக்கும் என்றென்றைக்குமாக.

தந்தைக்கும் மகனுக்கும்,
தூய ஆவியாருக்கும் மாட்சி உரித்தாகுக:
தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும்,
என்றென்றும் இருப்பதாக.

ஆமென்.


மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: